திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 செப்டம்பர் 2025 (11:28 IST)

'ஈபிஎஸ்தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர்': துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Udhayanithi
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி  தான் தொடர வேண்டும் என்று கூறினார்.
 
"அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஈபிஎஸ்தான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும்" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
 
அதிமுகவினர் இதை ஏற்றுக்கொள்வார்களா என்பது தெரியாது, ஆனால் நான் முன்மொழிகிறேன், நீங்கள் தான் நிரந்தர பொதுச்செயலாளர் என்று உதயநிதி குறிப்பிட்டது, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பேச்சு, அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran