1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (21:50 IST)

மக்கள் தந்த மகத்தான பரிசு: உதயநிதி ஸ்டாலின் டுவிட்!

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் தமிழக வரலாற்றில் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு அரசியல் கட்சி இவ்வளவு பெரிய வெற்றியை இதுவரை சந்தித்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் பெரும் எதிர்பார்ப்புடன் களம் இறங்கிய அதிமுக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவுக்கு மக்கள் அளித்த வெற்றி குறித்து உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
கழக அரசு நிறைவேற்றிய  வாக்குறுதிகளுக்கு மக்கள் தந்த மகத்தான பரிசு உள்ளாட்சி தேர்தல் வெற்றி. மீதமிருக்கும் வாக்குறுதிகளையும் விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு. வெற்றிபெற்ற இளைஞரணியினர்- கழகத்தினர், கூட்டணி கட்சியினருக்கு வாழ்த்து. தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.