அவர் பாஜக வேட்பாளரே இல்ல.. சுயேட்சையா நின்னவர்! – பாஜக தரப்பு விளக்கம்!
தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளர் ஒரு வாக்கு மட்டுமே பெற்றதாக வைரலான நிலையில் அவர் பாஜக வேட்பாளரே இல்லை என பாஜக தரப்பு விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் பல கட்சிகளும் போட்டியிட்ட நிலையில் பாஜகவும் போட்டியிட்டது. இந்நிலையில் கோனமுத்தூர் ஊராட்சியில் போட்டியிட்ட கார்த்திக் என்பவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்றிருந்தார். அவர் பாஜக வேட்பாளர் என செய்திகள் வெளியான நிலையில் பாஜக தரப்பில் அதை மறுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் இட்டுள்ள பதிவில் "எவ்வித கட்சி அடிப்படையும் இல்லாத கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்" பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திக் என்பவரை பாஜக கட்சியின் சார்பாக போட்டியிட்டார் என ஊடகங்களும், அறிவாலயம் உடன் பிறப்புகளும் பொய் தகவலை பரப்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.