செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 25 ஜூன் 2020 (20:29 IST)

அன்பு அண்ணனின் பெயரை உச்சரிக்காதீர்கள்: முதல்வருக்கு உதயநிதி கோரிக்கை

நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த சில நாட்களாக தினசரி டுவிட்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு கேள்வி எழுப்பி வருகிறார். அந்த வகையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒரு எம்எல்ஏ நாம் இழந்துவிட்டோம் என்று மறைந்த எம்.எல்.ஏ ஜெ அன்பழகன் குறித்து முதல்வர் கூறினார்.
 
முதல்வரின் இந்த பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தில் மறைந்த அன்பு அண்ணனின் கேள்விகளுக்குப் பதிலளிக்க வக்கற்றவர்களாக எத்தனை முறை அவரை வெளியேற்றி, இடைநீக்கம் செய்து, அவைக்குறிப்பிலிருந்து நீக்கியிருப்பீர்கள்? ஆனால் இன்று, ‘நிவாரணம் வழங்கியதால் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரை நாம் இழந்துள்ளோம்’ என்கிறீர்கள்
 
கழகம், தலைமையின் உண்மை விசுவாசியான அன்பு அண்ணன் அவர்களின் பெயரை நீங்கள் உச்சரிக்காதீர்கள். தவிர, வீட்டிலிருந்த உங்கள் அதிமுக எம்.எல்.ஏ பழனி, உங்கள் தனிச் செயலர் தாமோதரனுக்கு கொரோனா தொற்றியது எப்படி? அவர்கள் என்ன ‘ஒன்றிணைவோம் வா’ திட்ட பயனாளிகளா? பதில் சொல்லுங்கள் முதல்வர் அவர்களே’ என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
உதயநிதியின் இந்த டுவிட்டுக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது