தொடர்புடைய செய்திகள்
- செளதி அரேபிய கன்சல்டன்சி பணிகளில் குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்க முடிவு, இந்தியாவை எவ்வளவு பாதிக்கும்?
- ஒரே நாளில் 2,430 பேர் பாதிப்பு; 17 பேர் பலி! – இந்தியாவில் நீடிக்கும் கொரோனா!
- 5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தறோம்..! – உலக நாடுகளுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு!
- ஆஸ்திரேலிய மைதானங்களுக்கு மூன்று ஸ்பின்னர்கள் அதிகம்- இந்திய முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர்!
- ஆசியக்கோப்பை யாருக்கு? இன்று இந்தியா – இலங்கை பலபரீட்சை!
நாங்கள் சொல்லப்போவது ஒன்று தான், நாங்கள் சொல்லப்போவது இந்தி தெரியாது போடா: உதயநிதி!
எந்த வழிகளில் இந்தியை திணித்தாலும் நாங்கள் சொல்லப்போவது ஒன்றே ஒன்றுதான் என்றும் அது இந்தி தெரியாது போடா என்றும் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழகத்தில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்ததாக கூறப்படும் நிலையில் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக இளைஞரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது
இந்த நிலையில் சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழ் நாட்டுக்குள் கொண்டு வந்தாலும் நாங்கள் சொல்லப்போவது ஹிந்தி தெரியாது போடா என்றுதான் அவர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்தி தெரியாது போடா என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம் என்றும் அதையும் மீறி இந்தியை திணிக்க முயன்றால் டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம் என்றும் தெரிவித்தார்
மேலும் 2010ஆம் ஆண்டு தேர்தலில் எப்படி உங்களை விரட்டினோமோ, அதேபோல் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் விரட்டுவோம் என்றும் சென்னையில் நடைபெற்ற ஹிந்தி மொழிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்
Edited by Mahendran
