புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 அக்டோபர் 2018 (19:28 IST)

ஜெயலலிதாவை மிரட்டியவருக்கு நாங்கள் எம்மாத்திரம்? அமைச்சர் புலம்பல்

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற அதிமுக கட்சி ஊழியர் கூட்டத்தில் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கலந்துக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் தினகரன் குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். 
 
தினகரன், ஓபிஎஸ் என்னை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அந்த பதவியில் இருந்து தூக்கிவிட்டு என்னை அந்த பதவியில் அமர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். இதர்கு ஓபிஎஸ் சந்திப்பு நடந்த்து உண்மைதான் ஆனால், அங்கு நடந்ததாய் கூறப்படுவது உண்மை அல்ல என தெரிவித்தார். 
 
இதனையடுத்து தினகரன், விஜயபாஸ்கர் கூட என்னை வந்து சந்தித்துள்ளார் என கூறினார். இது குறித்து உதயகுமாரிடம் கேட்ட போது அவர் பின்வருமாறு பதில் அளித்தார். டிடிவி தினகரன் பலம் இழந்தவர், செல்வாக்கு இழந்தவர், ஊடகத்துறை கவனத்தை திருப்ப செயல்படுகிறார். 
 
நிகழ்ந்த சந்திப்பு குறித்து உடனே கூறாமல் அதன் மூலம் பயன் பெற பிளாக் மெயில் செய்கிறார். அவர் ஒரு பிளாக் மெயிலர், ஜெலலிதாவையே மிரட்டியவர்கள் எங்களை விடுவார்களா? இது அரசியல் பணி அல்ல, மக்கள் பணி அல்ல, தினகரன் ஊடகத்துறையை தன் பக்கம் ஈர்ப்பதற்கு தகாத முறையில், அநாகரிகமாக நடந்து கொள்கிறார். இது நல்லதல்ல. தினகரன் உண்மையானவர் என்றால் சந்தித்த உடனே தெரியபடுத்த வேண்டும் என பதிலளித்தார்.