புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (22:26 IST)

கருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது பல்வேறு கட்டங்களில் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஒரு வழக்கு கூட முடிவடைந்து தீர்ப்பு அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானதை அடுத்து அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக  சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சமீபத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றத்தை தமிழக அரசு அமைத்தது. இந்த நீதிமன்றத்திற்கு கருணாநிதி மீதான அவதூறு வழக்குகள் மாற்றப்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி மரணம் அடைந்துவிட்டதால் அவர் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் முறையிட்டதோடு, கருணாநிதியின் இறப்பு சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி கருணாநிதி மீதானா 13 வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.