உங்கள் தலைவரின் அறிக்கை கூட உங்களுக்கு புரியவில்லையா? திமுகவை கலாய்த்த தினகரன்

Last Updated: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (10:05 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அறிக்கையை திமுகவை சேர்ந்தாவர்களே புரியாமல் உள்ளதாக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கலாய்த்துள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த திமுக அமைப்புச்செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன், 'திருப்பரங்குன்றத்தில் திமுக வேட்பாளர் ஜெயித்ததாக நீதிமன்ற தீர்ப்பு வந்தால், அங்கு இடைத்தேர்தலுக்கே வேலையில்லை என்றும் இதை புரிந்து கொள்ளும் ஆற்றல் கூட தினகரனுக்கு இல்லையா? என்றும் கூறியிருந்தார்.


இதற்கு பதிலளித்த தினகரன்,
5 மாநிலங்களுக்கும், இடைத்தேர்தலைச் சந்திக்கும் கர்நாடகாவுக்கும், தேர்தல் தேதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்காததன் உள்நோக்கம் என்ன என்று திருப்பரங்குன்றத்தை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும், இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியே 'திமுக இரட்டை நிலை எடுத்தால், அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழப்பார்கள் என்று தான் செய்தியாளர்களிடம் கூறியதாகவும், தனது கட்சி தலைவரின் அறிக்கையைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் இளங்கோவனுக்கு இல்லையா?" என்றும் தினகரன் கலாய்த்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :