வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (16:02 IST)

உள்ளாடையில் 10.3 கிலோ தங்கம் கடத்திய 2 பெண்கள் சென்னையில் கைது.. சுங்கத்துறையினர் அதிரடி

கோப்புப் படம்
துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தும் செயல் அதிகரித்து வரும் நிலையில் இன்று இரண்டு பெண்கள் உள்ளாடையில் வைத்து தங்கம் கடத்தியதாக சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
உள்ளாடை, சூட்கேஸில் ரகசிய அறை அமைத்து துபாயில் இருந்து 10.3 கிலோ தங்கம் கடத்திய இரண்டு பெண்கள்சென்னையில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் துபாய் சென்று இன்று அதிகாலை சென்னை திரும்பிய நிலையில் இருவரையும் சந்தேகப்பட்ட  சுங்கத்துறையினர் அவர்களை சோதனை செய்ததில், அவர்கள் தங்கள் உள்ளாடையிலும், சூட்கேசிலும் கடத்திய தங்கம் பிடிபட்டுள்ளது
 
ரூ.7 கோடி மதிப்பிலான 10.3 கிலோ தங்கத்தை கைப்பற்றிய அதிகாரிகள், இரு பெண்களையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran