திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 25 மார்ச் 2024 (21:12 IST)

IPL-போட்டிக்கு என சிறப்பு பேருந்துகள்- சென்னை MTC அறிவிப்பு

MTC-chennai city bus
ஐபிஎல் -2024 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் கோலாகலமாக தொடங்கி போட்டிகள் நடந்து வரும் நிலையில், சென்னை கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிகளுக்கு அந்த அணி நிர்வாகமே மாநகரப் பேருந்துகளில் முன்கூட்டியே பணம் கட்டி பயணம் மேற்கொள்ள வழி செய்துள்ளது.
 
இந்த நிலையில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிராக,  குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடுகிறது. இப்போட்டிற்கு வர ரசிகர்களுக்கு மா நகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்வது பற்றி சென்னை  எம்.டி.சி - மா.போ.கழக மேலாண் இயக்குநர்  தகவல் தெரிவித்துள்ளதாவது:
 
சென்னை, M. A. சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில், 26.03.2024 அன்று நடைபெற உள்ள IPL - 2024 கிரிக்கெட் போட்டியை  காணவரும் பார்வையாளர்கள், தங்களது IPL கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச் சீட்டை காண்பித்து மாநகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம். மேலும், மாநகர போக்குவரத்துக் கழகம் போட்டி முடிந்த பின்பும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட உள்ளது.
 
போக்குவரத்து நெரிசலை  குறைக்கும் விதமாகவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாகவும், பொது போக்குவரத்து பயன்பாட்டினை அதிகரிக்கும் விதமாகவும் Chennai Super Kings Cricket Limited நிறுவனத்திடம்  மா.போ.கழகம் உரிய பயண கட்டணம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் இந்த வசதியானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
மேலும், 22.03.2024 அன்று நடைபெற்ற போட்டியின் போது வழங்கிய ஒத்துழைப்பு போல் இந்த போட்டிக்கும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.