இளையராஜா பயோபிக் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?
இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இதுதவிர, சிம்பொனி, கீர்த்தனைகள், புத்தகங்கள்,பயணக் கட்டுரைகள் என பன்முக கலைஞரகாகவும் இருக்கிறார்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ள இளைஞராஜாவின் வாழ்க்கைப் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை மும்பையைச் சேர்ந்த பிரபல நிறுவனம் தயாரிக்கிறது. இளையராஜாவாக தனுஷ் நடிக்க, இளையராஜா இசையில், அருண்மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.அப்போது ரஜினி, கமல் உள்ளிட்டோட் கலந்துகொண்டனர். இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியாகி பேசு பொருளானது.
இந்த நிலையில், இப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை எழுதுவதாக தகவல் வெளியாகிறது. இளையராஜா பயோபிக்கில், கமல் திரைக்கதை எழுதுவதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் வைரமுத்து ஆகிய இருவரைப் பற்றி இப்படத்தில் கேரக்டர்கள் வருமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இளையராஜா பயோபிக் படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க கேட்டிருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகிறது.
இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பரிசீலனை செய்வதாகக் கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இளையாராஜாவேதான் அவரின் வாழ்க்கைப் படத்திற்கும் இசையமைக்கவுள்ளார் என ஒரு தரப்பும் உறுதியாக கூறி வருகிறது.
இதைத்தான் அவரது ரசிகர்களும்கூட சமூக வலைதளங்களில் கருத்து கூறி வருகின்றனர். இருப்பினும் படக்குழுவினர் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்க வேண்டுமென விரும்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.
இளையராஜா இசை நிகழ்ச்சியின்போது ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் தோன்றி பழைய நியாபகங்களை பேசி, இளையராஜாவின் டியூனை கீபோர்ட் வாசித்தது மாதிரி ஒரு அதிசயம் நடந்தாலும் இப்படத்தில் நடக்க வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கலாம்.