வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (08:20 IST)

கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை.. எங்களுக்கு யாரும் போட்டியில்லை: அமைச்சர் சேகர்பாபு

sekar babu
கண்ணுக்கெட்டிய தூரம் வரை திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு எதிரிகளே இல்லை என்றும் எங்களுக்கு யாரும் போட்டியே இல்லை என்றும் அமைச்சர் சேகர்பாபு நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.

 மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதிமாறனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்த சேகர்பாபு காய்ந்த மரத்தில் தான் கல்லடி படும் என்று கூறுவார்கள், அது போல் திமுக தான் முதல் நிலையில் இருப்பது தெரிய வருகிறது

எங்களுக்கு கண்ணு கட்டிய தூரம் வரை எதிரிகளே தென்படவில்லை.  நாங்கள் யாரையும் போட்டியாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். கொரோனா காலங்களில், மழை வெள்ளம் காலங்களில் உறுதுணையாக இருந்தது திமுக தான். இது மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறினார்

இதை அடுத்து பேசிய தயாநிதி மாறன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எங்கள் தொகுதியில் வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம் என்றும் அவரும் எங்கள் தொகுதிக்கு வர உள்ளார் என்றும் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Edited by Siva