வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 9 ஏப்ரல் 2020 (18:02 IST)

விஷம் வைத்து இரண்டு புலிகள் கொலை? அதிர்ச்சியளிக்கும் தகவல்!

கோப்புப் படம்

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை அருகே, இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அவை இரண்டும் எட்டு வயதான் ஒரு ஆண் புலி மற்றும் பெண் புலி எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் புலிகளின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் உடலில் மாதிரிகளை சேகரித்த பின்னர் புலிகளை எரித்த வனத்துறையினர் அவை விஷம் வைத்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்துள்ளனர்.