திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 ஏப்ரல் 2020 (07:13 IST)

முதல் முறையாக விலங்குகளுக்கும் கொரோனா: புலி சிங்கங்களுக்கு பரவியதாக தகவல்

முதல் முறையாக விலங்குகளுக்கும் கொரோனா
உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்றாலும், இந்த வைரஸ் விலங்குகளைத் தாக்காது என்ற செய்தி நிம்மதி அனைவருக்கும் ஆறுதலாக இருந்தது 
 
ஆனால் சற்று முன் வெளிவந்த தகவலின்படி அமெரிக்காவில் உள்ள பிராக்சன் என்ற உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு புலிக்கு திடீரென கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து அந்த உயிரியல் பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளுக்கும் கொரோனா சோதனை செய்தபோது 6 புலிகளுக்கும் ஒருசில சிங்கங்களுக்கும் கொரோனா பரவியது தெரியவந்து உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கா நிர்வாகிகள் கொரோனா பாதித்த சிங்கங்கள் மற்றும் புலிகளை தனிமைப்படுத்தி உள்ளனர் 
கொரோனா தொற்று பரவுவது குறித்த விழிப்புணர்வை மனிதர்களுக்கே ஏற்படுத்த முடியாமல் அரசாங்கங்கள் திணறிக் கொண்டிருக்கும் நிலையில் விலங்குகளுக்கும் கொரோனா கொரோனா பரவினால் அதனால் ஏற்படும் விபரீதங்களை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அமெரிக்காவில் உள்ள இந்த பூங்காவை தவிர வேறு எங்கும் உள்ள விலங்குகளுக்கு கொரோனா தொற்று பரவியதாக செய்திகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது