ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வெள்ளி, 20 மார்ச் 2020 (17:55 IST)

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு....மக்கள் மகிழ்ச்சி!!!

கோடை கால தொடங்கவுள்ளதால் தமிழகத்தில்  வெய்யில் கொளுத்தித் தள்ளுகிறது. பெரும்பாலும் மதியம் வர வேண்டிய வெயிலோ காலையிலே வந்து விடுவதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலை நிலவும் என்றும் சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று நிலவிய வெப்பச் சலனத்தால், நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 
இன்று கோவையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது,சென்னையில் வானம் ஓரளவும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதிகபட்ட வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரியாகவும்  இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.