செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (18:55 IST)

மாவட்டவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: இன்றும் சென்னை முதலிடம்

தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் என்பது குறித்த தகவலைப் பார்ப்போம்
 
இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 48 பேர்களில் 16 பேர் தேனியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சென்னையில் 7 பேர்களும் திருச்சியில் 6 பேர்களும் விழுப்புரம் மற்றும் திருநெல்வேலியில் 4 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் இருவரும் திண்டுக்கல், சேலம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் 
 
இந்த நிலையில் ஒட்டுமொத்தமாக சென்னை மாவட்டம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் 156 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்து கோவையில் 60 பேர்களும், திண்டுக்கல்லில் 46 பேர்களும், திருநெல்வேலியில் 40-பேர்களும், திருச்சியில் 36 பேர்களும் ஈரோட்டில் 32 பேர்களும், நாமக்கல்லில் 33 பேர்களும் ராணிப்பேட்டையில் 27 பேர்களும் செங்கல்பட்டில் 24 பேர்களும் மதுரையில் 24 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய இரு மாவட்டங்களில் மிகவும் குறைவாக தலா ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது