1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (05:09 IST)

இன்னும் இரண்டு நாட்களுக்கு கனமழை! தாங்குமா சென்னை?

சென்னையில் கடந்த சில வாரங்களாகவே வெயில் காரணமாக வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், நீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. ஆனால் கடந்த ஒருசில நாட்களாக குறிப்பாக நேற்று இரவு முழுவதும் சென்னையின் பல பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் நீர் ஆதாரங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது



 
 
இந்த நிலையில் இந்த மழை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெங்களூரில் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் சென்னையிலும் வெள்ளம் ஏற்படுமா? என்றும் அவ்வாறு வெள்ளம் வந்தால் சென்னை தாங்குமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
 
எனவே வெள்ளம் ஏற்பட்டால் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இப்போதே மாநகராட்சி அதிகாரிகள் நிலைமையை சமாளிக்க தயார் நிலையில் இருப்பதாகவும் அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.