வியாழன், 1 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (06:15 IST)

சென்னையில் இன்றும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் இன்றும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னையில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதியில் இருந்தனர். அதுமட்டுமின்றி நீர் ஆதாரங்கள் வறண்டு போனதால் பொதுமக்கள் குடிநீருக்காக குடத்துடன் காத்திருந்த அவல நிலையும் இருந்தது



 
 
இந்த நிலையில் சென்னை மக்களை குளிர்விக்கும் வகையில் நேற்று நகரம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் மழை கொட்டி தீர்ந்தது. இதனால் தட்பவெப்பம் குளிர்ச்சியானது மட்டுமின்றி குடிநீர் பஞ்சமும் தீர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
 
இந்த நிலையில் சற்று முன்னர் வானிலை ஆய்வு மையம் அளித்துள்ளதகவலின்படி இன்றும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மிதமான மழை முதல் கனமான மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், அடுத்த அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்றும் கூறியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.