திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 12 ஆகஸ்ட் 2017 (11:20 IST)

தனுஷின் விஐபி-2 முதல் நாள் வசூல் நிலவரம்!

தனுஷ் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது விஐபி 2 திரைப்படம். இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இருந்த நிலையில், படத்தை பார்த்த ரசிகர்களும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.

 
இந்நிலையில் விமர்சகர்களிடையே கலவையான விமர்சனத்தை படம் பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படம் முதல் நாள் சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.48 லட்சம் வசூலித்துள்ளது. முதல்பாகத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து அனிருத்தின் இசை இல்லாதது ஒரு பெரிய குறையாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த வாரம் விடுமுறை நாட்கள் அதிகம் என்பதால் கண்டிப்பாக படம் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.