யுவராஜ், ரெய்னா நீக்கம் குறித்து வெளியான காரணம்!


Abimukatheesh| Last Updated: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (13:24 IST)
ரெய்னா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் வெற்றிப்பெற்ற இந்திய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் வெளியானது.
 
இதில் யுவராஜ் சிங் இடம்பெறவில்லை. யுவராஜ் சிங்கிற்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது என்றும் யுவராஜ் சிங் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது கஷ்டம் என்றும் சில செய்திகள் வெளியானது.
 
ரெய்னா வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி விளையாடிய போதும் அணியில் இடம்பெறவில்லை. தற்போது இலங்கை அணியுடனான போட்டிக்கும் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கவலையில் உள்ளனர். 
 
இந்நிலையில் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்திய அணியில் இடம்பெறாதது குறித்த காரணம் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள தேசிய கிரிக்கெட் பயிற்சி மையத்தில் இருவருக்கும் யோ யோ என்ற உடற்தகுதி சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர்கள் தோல்வி அடைந்ததால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :