திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (16:23 IST)

மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்காத எச்.ராஜா: மெய்யாலுமா?

மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்காத எச்.ராஜா: மெய்யாலுமா?

தமிழக பாஜகவில் எச்.ராஜா சர்ச்சைக்குறிய வகையில் பேசுவதில் வல்லவர். சுப்பிரமணியன் சுவாமிக்கு பின்னர் எச்.ராஜா சர்ச்சையான கருத்துக்களையே கூறுவார். இதனால் எச்.ராஜா பேசுவது ஊடகங்களில் முக்கியத்துவம் பெறுகிறது.


 
 
அதுமட்டுமல்லாமல் எச்.ராஜா சமூக வலைதளமான டுவிட்டரில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுபவர். இவர் அவ்வப்போது நெட்டிசன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளிப்பார். விமர்சனங்களுக்கு நேரடியாக பதிலும் அளிப்பார்.
 
தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் மிகவும் சரளமாக பேசும் எச்.ராஜா பாஜகவின் தேசிய செயலாளராக உள்ளார். இந்நிலையில் அவருடைய கல்வித்தகுதி பற்றி பலருக்கும் தெரியாது.

 
இதனையடுத்து நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் எச்.ராஜாவிடம், ஆமா நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள். எங்கு படித்தீர்கள். கூகுளீல் உங்களுடைய படிப்பை பற்றி பதிவிடவும். அனைவரும்க்கும் பயணளிக்கும் என கேட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த எச்.ராஜா நான் மழைக்குக்கூட பள்ளியில் ஒதுங்கியதில்லை என கூறியுள்ளார். இது எச்.ராஜா கிண்டலாக அவருக்கு பதில் அளித்திருக்கலாம் என பேசப்படுகிறது.