இனிமேல் ஓடும் ரயில்களில் குளுகுளு மஜாஜ்....மக்கள் ஆர்வம்

majaj
Last Modified ஞாயிறு, 9 ஜூன் 2019 (10:18 IST)
நம் நாட்டில் முதன்முறையாக ஓடும் ரயில்களில் ரு.100க்கு மசாஜ் செய்துகொள்ளும் வசதி மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுசம்பந்தமாக மேற்கு ரயில்வேயின் ராட்லம்  மண்டலம் சார்பாக பரிந்துரை  வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 
 
அதாவது, ரயில்கள் ஓடிக்கொண்டுள்ளபோதே பயணிகள் மஜாஜ் செய்துகொள்ளலாம்! இதற்கு கட்டணமாக ரூ. 100 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
 
இந்நிலையில் புதுதில்லி - இந்தூர் இண்டர்சிட்டி டேராடூன் - இந்தூர் , அமிர்தசரஸ் - இந்தூர் ஆகிய 39 ரயில்களில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தம் என்றும், இதற்க்காக பயணிகளிடம் ரூ. 100 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் மஜாஜ் செய்ய 5 மஜாஜ் நிபுணர்கள் பணிக்கு சேர்க்கப்படுவார்கள் என்றும் , பயணிகளுக்கு மஜாஜ் செய்ய விருப்பம் இருந்தால் அதற்காக கட்டணம் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :