தெரு நாய்கள் கடித்து 2 குழந்தைகள் பலி

dog
Last Modified சனி, 5 மே 2018 (08:27 IST)
உத்திரபிரதேசத்தில் 2 சிறுவர்களை தெரு நாய்க்கள் கடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தெரு நாய்க்கள் தாக்கி மனிதர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
 
இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வீரேந்திரா(10)  என்ற சிறுவன், மாங்காய் பறிக்க முயன்றுள்ளான். அங்கு சுற்றித் திரிந்த தெரு நாய்க்கள் சிறுவனை பார்த்து குறைத்துள்ளன. இதனால் பயந்துபோன சிறுவன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சித்துள்ளான்.
 
இதனையடுத்து அந்த சிறுவனை வளைத்த தெரு நாய்கள், சரமாரியாக கடித்து குதறியுள்ளன. அங்கிருந்தவர்கள் நாயிடமிருந்து சிறுவனை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
 
அதேபோல் மகிசங்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி கீதா(6), வீட்டு வாசலில் விளையாடிய போது, தெரு நாய்கள் கடித்து உயிரிழந்தாள்.தெரு நாய்கள் கடித்து சிறுவர், சிறுமியர் உயிரிழப்பது சீதாப்பூர் மாவட்ட மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :