1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Twitter hashtag against Amitsha gets trending

#GoBackAmitShah + #Goback_Mr_420: இதோ ஆரம்பிச்சுடானுங்கல...

Amit Shah
சமூக வலைத்தளமான டிவிட்டரில் அமித்ஷா வருகைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றனர். 
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற உள்ள அரசு விழாவில் கலந்துக்கொண்டு பின்னர் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக்கொள்ள உள்ளார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.  இவரின் வருகையை பாஜகவினர் எதிர்நோக்கி காத்துகிடக்கின்றனர். 
 
இந்நிலையில் வழக்கம் போல சமூக வலைத்தளமான டிவிட்டரில் அமித்ஷா வருகைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றனர். ஆம், அவருக்கு ஆதரவாக #TNwelcomesamitshah #TNwelcomeschanakya என்ற ஹேஷ்டேக்குகள் பாஜகவினரால் டிரெண்டாக்கப்படுகிறது. 
 
ஆனால், இவர் வருகையை எதிர்த்து #GoBackAmitShah, #Goback_Mr_420, #Goback_Tadipar போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 
அடுத்த கட்டுரையில்
பாரதத்தின் நிகழ்காலமே! தமிழகத்தின் எதிர்காலமே! - ஓவராய் கூறும் பாஜகவினர்!