திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 21 நவம்பர் 2020 (09:03 IST)

சென்னையில் ஒருநாள் தங்கி என்னென்ன செய்ய போகிறார் அமித் ஷா?

ஒன்று சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயண திட்டம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று சென்னையில் நடைபெற உள்ள நீர்தேக்க திட்டம் மற்றும் நலப்பணி திட்டங்களை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா வர உள்ளார். அரசு விழாவிற்கு பிறகு பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்து கொண்டு அவர் பேச உள்ளார்.
 
இந்நிலையில் அவரது பயண் திட்டம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஆம், காலை 10.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.45 மணிக்கு சென்னை வருவார். 
பின்னர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுத்து கலைவாணர் அரங்கில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார். 
 
அதைத்தொடர்ந்து மீண்டும் லீலா பேலஸுக்கு சென்று மாலை 6.20 மணி முதல் பாஜக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார். இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பின் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது முடிந்த பின்னர் இன்று இரவு சென்னையில் தங்கும் அமித் ஷா, நாளை காலை 10 மணிக்கு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.