அதிமுகவை குத்தகைக்கு எடுத்துள்ள பாஜகவை... உதயநிதி பேட்டி!!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2020 (16:51 IST)
சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக, பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
 
தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது.
 
இந்நிலையில் இன்று உதயநிதி ஸ்டாலின் திருவாரூரில் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் முதல்கட்ட பிரசாரத்தை தொடங்குகிறார். இதனைத்தொடர்ந்து அவர் திருவாரூர், நாகை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 10 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.  
 
இதனிடையே அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், வரும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக, பாஜகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என கூறியுள்ளார். அதாவது, நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கும் அதனை குத்தகைக்கு எடுத்துள்ள பாஜகவிற்கும் மக்கள் பாடம் புகட்டியது போல வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் கோரியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். 


இதில் மேலும் படிக்கவும் :