1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk won in floor test in assembly

நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் வெற்றி!.. தவெக ஆட்சி தொடரும்..

vijay
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்துள்ள நிலையில் அந்த கட்சிக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தை, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் ஆதரவு கொடுத்திருக்கிறது. அந்த அடிப்படையில்தான் தற்போது தமிழகத்தில் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று சட்டசபையில் முதல்வர் விஜய் நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வந்தார். முடிவில் அந்த கட்சிக்கு 144 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதில் தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் மற்றும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எனவே, தவெகவுக்கு 144 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. 22 பேர் எதிர்த்து வாக்களித்தனர்.. 5 பேர் நடுநிலையை வகித்தனர். இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் பிரேமலதா ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தவெக ஆட்சி தொடர்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது..
அடுத்த கட்டுரையில்
புஷ்பா பட பாணியில் அரசியல்!..இதுதான் தூயசக்தியா?.. விஜயை மடக்கிய உதயநிதி..