தொடர்புடைய செய்திகள்
- தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் விரைவில் பேச்சுவார்த்தை: இலங்கை மீன்வளத்துறை அமைச்சர்
- திருமாவளவன், பிரேமலதாவை இன்று சந்திக்கும் விஜய்?..
- தவெகவுக்கு ஆதரவளிக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள்?!.. கேட்பதை கொடுப்பாரா விஜய்?..
- எல்லாரையும் பாக்குறாரே!.. எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பாரா விஜய்?...
- சீமானை சந்திக்கும் விஜய்!. இன்னும் யாரு?!.. பரபர அப்டேட்..
காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை விவகாரங்கள்.. அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை..!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள், மாநிலத்தின் முதுகெலும்பாகத் திகழும் வேளாண் துறை மற்றும் நீர்வளத்துறை ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை விவகாரங்கள் மற்றும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது போன்ற முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக, வரவிருக்கும் குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் இருப்பு மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, பயிர்க்காப்பீடு திட்டத்தை அனைத்து விவசாயிகளும் எளிதாகப் பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். நீர்நிலைகளை முன்கூட்டியே தூர்வாருவதன் மூலம் மழைக்காலங்களில் நீரைச் சேமிப்பதுடன், விவசாயத்திற்குத் தடையின்றி நீர் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
மாநிலத்தின் நீர் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்கும் என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தத் தேவையான அனைத்து நவீனத் தொழில்நுட்ப உதவிகளும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் உறுதியளித்தார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
edited by Siva
