1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna said tvk next target is triplicane

ஸ்கெட்ச் மிஸ் ஆயிடுச்சி!.. அடுத்த ஸ்கெட்ச் சேப்பாக்கம்தான்!.. ஆதவ் அர்ஜுனா ராக்ஸ்!...

adhav arjuna
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சியாக உருவெடுத்த தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு 35 சதவீத வாக்குகளை பெற்று ஆச்சரியப்படுத்தியது.  முதல் தேர்தலில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர் பெற்றதை விட ஒரு சதவீதம் அதிகமாக வாக்குகளை தவெக பெற்றிருக்கிறது.

இதில் ஆச்சர்யமும், திமுகவினருக்கு அதிர்ச்சியும் என்னவெனில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் தோற்றுப் போனதுதான். திமுகவின் கோட்டையாக இருந்த சென்னையில் 14 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கிறது.

சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலினும், துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவும் மட்டுமே வெற்றி பெற்றனர். மற்ற எல்லா தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். இந்நிலையில் தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தில் பேசியபோது ‘ஸ்கெட்ச் கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சு.. மொத்த ஸ்கெட்ச்சையும் கொளத்தூர் தொகுதியிலேயே வச்சிட்டோம்.. பரவாயில்லை அடுத்த தடவை சேப்பாக்கத்தில் வச்சிடலாம்’ என பேசினார்.
அடுத்த கட்டுரையில்
தவெகவுக்கு ஆதரவளித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பு: விசிக எம்பி கருத்து..!