1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. sengottayan said more admk mlas will join tvk

அடுத்து 15 பேர் தவெகவுக்கு வராங்க!.. பழனிச்சாமிக்கு பீதியை கிளப்பும் செங்கோட்டையன்!..

sengottayan eps
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதேபோல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டது. இதனால் அந்த கட்சியை எதிர்க்கட்சியாக கூட அமர முடியவில்லை. தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தி கொண்ட சி.வி சண்முகம், எஸ் பி வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் செய்தியாளர்களை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தனர். பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என கூறினர். ஆனால், அதை பழனிச்சாமி ஏற்கவில்லை.

அதோடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்த போது  25 அதிமுக எம்.எல்.ஏக்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும், அதில் 7 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து விட்டனர். அதில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்து இரண்டு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள்  வெற்றி பெற்றுவிட்டனர். மேலும், ஏற்கனவே அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகளாக இருந்தும் அந்த கட்சி தோல்வியை சந்தித்து மூன்றாவது இடத்திற்கு சென்று விட்டது.

இந்நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக எஸ்.பி வேலுமணி இல்லத்தில் தங்கமணி, சிவி சண்முகம் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று பழனியில் நடைபெற்ற ஒரு தவெக கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ‘விரைவில் அதிமுகவிலிருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வரவிருக்கிறார்கள்.. நேற்று கூட்டம் போட்டு பேசி முடிவெடுத்துள்ளனர்.. நல்ல வேலையாக எடப்பாடி பழனிச்சாமி என்னை அதிமுகவிலிருந்து நீக்கினார்.. அதனால்தான் மக்கள் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. யானை திரிந்து கட்டெறும்பான கதையாக அதிமுக மாறிவிட்டது.அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட என்னை முதல்வர் விஜய் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரே சட்டப்பேரவையில் அமர வைத்துள்ளார்’ என பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
TET தேர்வு முடிவுகள் வெளியீடு!.. 61,634 ஆசிரியர்கள் தேர்ச்சி...