1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 ஏப்ரல் 2022 (07:41 IST)

நிலக்கரி பற்றாக்குறை இல்லை: மத்திய அரசு தகவல்!

coal
நிலக்கரி பற்றாக்குறை இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை இல்லவே இல்லை என்றும் 45 நாட்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் அளவுக்கு நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக இந்தியாவில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு நிலக்கரி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என உறுதிபடக் கூறி உள்ளது.