1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. To provide free electricity Rs. 5000 crore allocation

இலவச மின்சாரம் வழங்க ரூ. 5000 கோடி ஒதுக்கீடு

provide free electricity
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க  ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. 1 மணி நேரம் 55 நிமிடங்களுக்கு வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயம், மீன் பண்ணைகள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில்,   விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க TANGEDCo- விற்கு ரூ.5,15 7.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்டஹ் பட்ஜெட் தாக்கல் குறித்து முதல்வர் ஸ்டாலின், மண்ணைக் காக்கும் பட்ஜெட் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்: விரைவில் அமல்!