செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (09:24 IST)

ஆதிதிராவிடர், பழங்குடி மக்களுக்கு இலவச மின்சாரம்! – முதல்வர் அறிவிப்பு!

Pasavaraj Bommai
கர்நாடகத்தில் வசித்து வரும் ஆதிதிராவிடர், பழங்குடி மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபுஜெகஜீவன்ராம் பெயரிலான விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.

அதன்படி ஆதிதிராவிட, பழங்குடி சமூக மகளுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள வழங்கப்படும் மானியம் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். பழங்குடியினருக்கு உதவி செய்ய வசதியாக ஒவ்வொரு தாலுகாவிலும் பாபுஜெகஜீவன்ராம் சுயதொழில் திட்டம் அமல்படுத்தப்படும்.

குடீர திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு 75 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படும். புதிதாக தொழில் தொடங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.