1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tuticorin vao murder case judgement

தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு.. இருவருக்கு ஆயுள் தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு..!

தூத்துகுடி
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து விஏஒ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் தீர்ப்பு சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் இதில் குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
 
கடந்த ஏப்ரல் 25-ம் தேதி மணல் கொள்ளையர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் தூத்துக்குடி விஏஓ லூர்து பிரான்சிஸ். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் ராமசுப்பு,மாரிமுத்து ஆகியோருக்கு ஆயுள் சிறை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்வம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
'விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை''- முதல்வரின் மகள்