1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (13:54 IST)

'விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை''- முதல்வரின் மகள்

அமலாக்கத்துறை முன் தான் ஆஜராகப்போவதில்லை என்று  தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதா கூறியதாகத் தகவல் வெளியாகிறது.

கல்வி மற்றும் ஆயத்தீர்வை உள்ளிட்ட துறைகளில் கவனித்து வரும் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா மீதான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது .

இதனையடுத்து அவரது வீட்டிலும், டெல்லி துணை முதலமைச்சர் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
 

இந்த முறைகேட்டில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதாவுக்கும்  தொடர்பிருப்பதாக தெலுங்கானா பாஜக குற்றஞ்சாட்டியது.

இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில்  இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று  தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவின் மகளும், பாரதிய ராஷ்டிர சமிதியின் எம்.எல்.சியுமான கவிதாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால், அமலாக்கத்துறை முன் தான் ஆஜராகப்போவதில்லை என்று கவிதா கூறியதாகத் தகவல் வெளியாகிறது.