1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 டிசம்பர் 2023 (07:31 IST)

தூத்துக்குடி, நெல்லையில் இன்று பள்ளி, கல்லூரிகள் செயல்படுமா? முக்கிய அறிவிப்பு..!

தூத்துக்குடி, நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது என்பதும் இதனால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம்.

தற்போது மழை நின்று வெள்ளம் வடிய தொடங்கினாலும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பதும் பலர் தங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து உள்ளதால்  அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தூத்துக்குடி, நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையில் இன்றும் பள்ளி கல்லூரிகள் செயல்படுமா என்பது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்பு காரணமாக விடுமுறை நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லையில் 1-8ம் வகுப்பு வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றும், 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போல வகுப்புகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva