திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (18:17 IST)

நெல்லை, தூத்துக்குடி மக்களுக்கு ரூ.6000 நிவாரணம்.. தென்காசி, குமரி மக்களுக்கு நிவாரணம் உண்டா?

நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கன்னியாகுமரி பகுதி மக்களுக்கு பாதிப்புகளின் அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தென்காசி மாவட்ட மக்களுக்கு ரூ.1,000 வெள்ள நிவாரணமாக வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!அவர் கூறினார்.
 
மேலும் பாதிக்கப்பட்ட விவசாய நிலம் ஹெக்டேருக்கு ரூ.17,000 வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 
மேலும் அடிக்கடி டெல்லி செல்லும் ஆளுநர், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை பெற்றுத் தர வேண்டும் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், சென்னை வெள்ளம், தென் மாவட்ட வெள்ளம் ஆகியவற்றை தேசிய பேரிடராக மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை, நிதியும் ஒதுக்கவில்லை என்று தெரிவித்தார்,
 
முன்னதாக நெல்லை மக்களுக்கு வெள்ள நிவாரணப் பொருட்கள் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார் 
 
Edited by Mahendran