தொடர்புடைய செய்திகள்
- திருவாரூரை அடுத்து மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!
- நாளை பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு: எந்த மாவட்டத்தில்?
- தூத்துக்குடி மக்களே, இந்த அவசர எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்: கனிமொழி அறிவிப்பு!
- புதுவையில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
- சென்னை உள்பட மொத்தம் 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நாளை 4 மாவட்ட பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!
கனமழை காரணமாக ஏற்கனவே மூன்று மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்ட பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் பள்ளிகள் கல்லூரிகள் கடந்த சில நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திருவாரூர் புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை என நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து நாளை நான்கு மாவட்டங்களுக்கு பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
