புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 நவம்பர் 2021 (07:41 IST)

புதுவையில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

புதுவையில் 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியானதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் இன்றும் நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாநிலத்தின் முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகத்தில் சென்னை உள்பட 26 மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவையிலும் இரண்டு நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது