1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Supporters at poes garden pooja

போயஸ் கார்டனில் திரண்ட தினகரன் ஆதரவாளர்கள் - திடீர் பரபரப்பு

TTV Dinakaran
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு திதி கொடுப்பதற்கு மறுப்பு தெரிவித்த போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெற்றிவேல் எம்.எல்.ஏ உட்பட பலர் போயஸ் கார்டனில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


 
ஜெ.வின் நினைவு நாள் வருகிற டிசம்பர் மாதம் 5ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக சில பூஜைகள் செய்ய, தினகரன் தரப்பிலிருந்து சில பூசாரிகள் இன்று வேதா இல்லத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆனால், போலீசார் அதற்கு அனுமதி தரவில்லை எனத் தெரிகிறது.
 
இதையடுத்து வெற்றிவேல் எம்.எல்.ஏ உள்ளிட்ட தினகரனின் ஆதரவாளர்கள் போயஸ் கார்டன் வீட்டை முற்றுகையிட்டனர். ஆனால், வருமான வரித்துறை சோதனையை காரணம் காட்டி போலீசார் அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
 
இதனால், போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ “ இது மாத மாதம் செய்யப்படுகிறது திதிதான். ஆனால், தற்போது போலீசார் அனுமதி மறுக்கின்றனர்” எனக் கூறினார்.
 
இந்த விவகாரம் போயஸ்கார்டன் வேதா நிலையம் இல்லம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
ராகுல் காந்தி தலைவராவது எங்களுக்கு மகிழ்ச்சி; உபி முதல்வர் யோகி