திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: ஞாயிறு, 19 நவம்பர் 2017 (13:59 IST)

போயஸ் கார்டன் சோதனை ஆப்ரேசன் புளு ஸ்டாரை போன்றது: செம்மலை கருத்து!

போயஸ் கார்டன் சோதனை ஆப்ரேசன் புளு ஸ்டாரை போன்றது: செம்மலை கருத்து!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
இதற்கு அதிமுகவினர் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணியில் உள்ளவர்கள் கூட இந்த சோதனை வருத்தத்தை அளிக்கிறது என கூறியுள்ளனர். தினகரன் அணியில் உள்ளவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பும், எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தும் வருகின்றனர்.
 
இந்நிலையில் இந்த சோதனை குறித்து பேசியுள்ள ஓபிஎஸ் அணியை சேர்ந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் சேர்ந்தே உள்ளது என கூறியுள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது பஞ்சாப் பொற்கோவிலில் தீவிரவாதிகள் ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்தார்கள் என்று தகவல் அறிந்ததும் ராணுவத்தை அனுப்பி ஆப்ரேசன் புளு ஸ்டார் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை எல்லாம் சுட்டுக்கொன்று ஆயுதங்களை கைப்பற்றி தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
 
அன்று இந்திரா காந்தியின் அந்த நடவடிக்கையை பாராட்டியவர்களும் உண்டு, கண்டித்தவர்களும் உண்டு.  அதைப்போல இந்த வருமான வரித்துறை சோதனைக்கு ஆதரவும் இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது என்றார் செம்மலை. நோக்கம் நல்ல நோக்கமாக இருந்தால் வரவேற்கலாம். அதே நேரத்தில் அரசியல் காரணமாக இருந்துவிடக் கூடாது என தெரிவித்தார்.