செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (13:41 IST)

வாழாவெட்டி அரசு - வார்த்தையை தேடிக்கண்டுபிடித்து திட்டும் தினகரன்

தமிழகத்தில் உள்ள வாழாவெட்டி மற்றும் கையாலாகாத அரசை அகற்ற வேண்டும் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விவசாயிகளின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஆகியோர் தலைமையில் இன்று திருச்சி விமான நிலையத்தை முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் டிடிவி தினகரன் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
 
மேலும், அனைவரும் சேர்ந்து விமான நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  அதன்பின் அங்கு பேசிய தினகரன் “ தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக போராடுவோம். ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என அனைத்து திட்டத்தையும் எதிர்ப்போம். கரும்பு விலை உள்ளிட்ட விவசாய பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் வாழாவெட்டியாக உள்ள இந்த கையாலாகாத அரசி எதிர்த்து போராடுவோம்” என அவர் பேசினார்.