அமமுக நிர்வாகி சட்டையை கிழித்த அதிமுகவினர்
கரூர் அருகே வேட்பு மனுக்கள் கொடுப்பதில் பாரபட்சம் அ.தி.மு.க.வினருக்கு மட்டுமே வேட்பு மனுக்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதை கேள்வி கேட்ட அம்மா மக்கள் முன்னேற்றக்கழக நிர்வாகிக்கு அடித்து அவரை சட்டை கிழிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தேர்தலில் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக அ.தி.மு.கவினருக்கே மட்டுமே வேட்பு மனு கொடுக்கப்பட்ட நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் டி.டி.வி அணியினருக்கு வேட்பு மனு கொடுக்கப்பட்டவில்லை.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தகவல் தொழில் நுட்பபிரிவு நிர்வாகி பூபதி மற்றும் கட்சியினரை அ.தி.மு.கவினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்நிலையில், பூபதி சட்டை கிழிந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதே போல, மற்ற கட்சியினருக்கும் வேட்புமனுக்கள் கொடுக்காத நிலையில், காவல்துறையினர் முன்னிலையில், ஆளுகின்ற அ.தி.மு.கவினர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
- அனந்தகுமார்(கரூர்)