வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 மார்ச் 2018 (16:06 IST)

மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? - தமிழக அரசு முடிவு

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

 
பல வருடங்களாக நடந்து வரும் இந்த பிரச்சனையில்,  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் அதற்கு 6 வாரம் கெடு விதித்தது. அந்த கெடு இன்றோடு முடிவடைகிறது. ஆனால், மத்திய அரசில் இருந்து ஒரு துரும்பை கூட தூக்கிப் போட வில்லை.  
 
அந்நிலையில், தமிழகத்தில் எங்களை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறுகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் எனப்பேசியுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் அடுத்து என்ன நடவடிக்கை எடுப்பது என ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய முடிவெடுத்திருப்பதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. வருகிற 31ம் தேதி, அதாவது சனிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படும். அதேபோல், வருகிற ஏப்ரல் 2ம் தேதி, திங்கட்கிழமை காலை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது.