1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:23 IST)

திருச்சியில் டிடிவி தினகரன் அதிரடி கைது

திருச்சியில் டிடிவி தினகரன் அதிரடி கைது
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. குறிப்பாக திருச்சியே ஸ்தம்பித்து போகும் அளவுக்கு அந்த நகரம் முழுவதுமே பல்வேறு கட்சியினர்களின் போராட்டம் நடந்து வருகிறது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில்  மாவட்டச் செயலாளர் குமார், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் தி.மு.க தலைமையிலான அனைத்துக் கட்சி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்

திருச்சியில் டிடிவி தினகரன் அதிரடி கைது
இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் ஒன்றை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு இன்று நடத்தினார். இந்த போராட்டத்தில் டிடிவி தினகரன், பி.ஆர்.பாண்டியன் ஆகியோர்களும் கலந்து கொண்டதை அடுத்து டிடிவி தினகரன், அய்யாகண்ணு உள்பட பலரை போலீசார் கைது செய்தனர்.