வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 25 ஜூன் 2019 (11:01 IST)

தேனியில் கசிந்த ரகசியம்! தங்க தமிழ்செல்வன் இப்படி பேச தினகரன் தான் காரணமாம்...

தங்க தமிழ்செல்வன் அமமுக நிர்வாகி ஒருவரிடம் தினகரனை விமர்சித்ததற்கு டிடிவி தினகரன் தான் காரணம் என தேனி வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
தங்க தமிழ்ச்செல்வனுக்கும் தினகரனுக்கும் மக்களவை தேர்தல் முடிந்ததில் இருந்தே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரின் பிரச்சனைகள் சந்திக்கு வந்துள்ளது. 
 
தங்க தமிழ்ச்செல்வனின் ஆடியோ வெளியாகிய நிலையில் பதிலடியாக டிடிவி தினகரன் இன்று தேனி மாவட்ட நிர்வாகிகளுடன்  ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்திற்கு பின்னர் தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை டிடிவி தினகரன் எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், தங்க தமிழ்செல்வன் அவ்வாரு பேசியதற்கு தினகரன் தான் என்று கூறப்படுகிறது. அதவாது, தங்க தமிழ்செல்வன் அதிமுகவிற்கு செல்ல இருப்பதாக செய்திகள் வெளியானதால் தினகரன், தேனிக்கு புதிய நிர்வாகியை நியமிக்க சொல்லினாராம். 
 
அதன் அடிப்படையில் தேனியில் நேற்று முன்தினம் அமமுகவின் கூட்டம் நடந்ததாகவும், இதனால்தான் தங்க தமிழ்ச்செல்வன் போனில் தினகரனின் போக்கை கடுமையாக திட்டினார் என தேனி தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.