செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 24 ஜூன் 2019 (12:20 IST)

அசராத தினகரன்: நிர்வாகிகள் அப்செட்; அமமுகவின் நிலைபாடு என்ன?

அசராத தினகரன்: நிர்வாகிகள் அப்செட்; அமமுகவின் நிலைபாடு என்ன?
டிடிவி தினகரன் அமமுக ஒத்த கருத்துடைய கட்சியினருடனோ அல்லது தணித்தோ போட்டியிடும் என கூறியுள்ளதால் நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர். 
 
மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் அமமுக, தமிழகத்தில் உள்ள திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக இருக்கும் என எதிர்பார்த்ததற்கு தலைகீழான முடிவை கொடுத்தது. 
 
அதனை தொடர்ந்து அமமுகவை சேர்ந்த பலர் கட்சி மாற துவங்கினர். ஆனால், தினகரன் இதற்கெல்லாம் அசருவதாய் இல்லை. அதிமுகவினர் எங்கள் கட்சியில் உள்ளவர்களை பதவி ஆசைக்காட்டி இழுக்கின்றனர். அப்படி அங்கு சென்றவர்கள் மீண்டும் அமமுகவிற்கே திரும்புவார்கள் என தெரிவித்தார். 
அசராத தினகரன்: நிர்வாகிகள் அப்செட்; அமமுகவின் நிலைபாடு என்ன?
அதோடு, உள்ளாட்சி தேர்தலில் எங்களுடன் ஒத்த கருத்துடைய கட்சியினருடன் கூட்டணி அமைத்தோ, அல்லது தணித்தோ போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு கட்சி நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.  
 
இதற்கு முன்னர், நாம் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால்தான் நம்மைக் குறிவைத்துப் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். அதனால் இனி முதற்கொண்டு தேர்தல்களில் நாம் கண்டிப்பாக கூட்டணி அமைத்தே தீர வேண்டும் என கூறிய பின்னரும் இப்படி மீண்டும் தணித்து போட்டியிடவும் தயார் என கூறியிருப்பது நிர்வாகிகளை அப்செட்டாக்கி உள்ளது.