வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 25 ஜூன் 2019 (09:00 IST)

லீக்கான ஆடியோ... எகிறிய தங்க தமிழ்செல்வன்; அதிரடியில் இறங்கும் தினகரன்!

தங்க தமிழ்செல்வன் தினகரனை வசை சொற்களில் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
சமீபகாலமாக டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் கூடிய விரைவில் தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவில் இணையவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. 
 
இது குறித்து தினகரனிடம் கேட்ட போது, அதிமுகவினர் பதிவியை கொடுத்து அமமுகவினரை தங்களது பக்கம் இழுக்கின்றனட். ஆனால், அங்கு சென்றாலும், சென்றவர்கள் மீண்டும் இங்குதான் வருவார்கள் என பேசியிருந்தார். 
இந்நிலையில் டிடிவி தினகரனின் உதவியாளரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் தங்க தமிழ்செல்வன் பின்வருமாறு பேசியுள்ளார்.  
 
'இப்படியே செயல்பட்டு கொண்டிருந்தால் ஜென்மத்திலும் உங்களால் ஜெயிக்க முடியாது. நீங்கள் அழிந்து போய்விடுவீர்கள். நாளைக்கே என்னால் மதுரையில் கூட்டம் போட்டு என் செல்வாக்கை நிரூபிக்க முடியும். இந்த மாதிரி பேடித்தனமாக அரசியல் செய்தால் ஜென்மத்திற்கும் அவர் ஜெயிக்க மாட்டார்' என பேசியிருந்தார். 
 
இந்த ஆடியோ வெளியானதையடுத்த தங்க தமிழ்செல்வன் எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தினகரன் இதை சும்மா விடுவதாய் இல்லை. இன்று அமமுக ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறாராம்.