1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran says about this election,

உண்மையான தொண்டர்களுக்கும் தமிழின துரோகிகளுக்கும் நடக்கும் தேர்தல்: டிடிவி தினகரன்

அண்ணா
நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் அண்ணாவின் உண்மையான தொண்டர்களுக்கும் தமிழின துரோகிகளுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, திமுக தவிர கமல்ஹாசன் தலைமையில் மக்கள் நீதி மய்யம் கூட்டணியும், டிடிவி தினகரன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியும் போட்டியிடுகின்றன. இது போக ஐந்தாவது கூட்டணியாக சீமான் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் கொடுத்தது போக மீதி தொகுதியில் போட்டியிடுகிறார் டிடிவி தினகரன் கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வரும் டிடிவி தினகரன் இன்று நடந்த பிரச்சாரம் ஒன்றில் இந்த தேர்தல் அண்ணாவின் உண்மையான தொண்டர்களுக்கும் தமிழினத் துரோகிகளும் நடக்கும் தேர்தல் என்று குறிப்பிட்டுள்ளார்
அடுத்த கட்டுரையில்
கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை: தலைமை செயலாளர் அறிவிப்பு!