வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 மார்ச் 2021 (19:44 IST)

கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை: தலைமை செயலாளர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை செயலாளர் அறிவித்துள்ளார் 
 
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது இன்றும் தமிழகத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் சென்னையில் 800க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட ஒரு சில கட்டுப்பாடுகள் தேர்தல் முடிந்ததும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது